நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : பாஜக தலைவர் அண்ணாமலை நாளை முதல் பரப்புரை..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி, நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதன்படி நேற்று வரை மொத்தம் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் பரப்புரை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.