நகர்ப்புற தேர்தல் – மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற விதிமீறல்களால் மாநில தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவில் எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதற்கும் சான்றளிக்க வேண்டும் என்றும் வேட்புமனுவில் கூடுதலாக இணைக்கப்பட்ட பக்கங்கள் கிழிக்கப்படுவதால் வேட்புமனுக்களை நிராகரிக்கப்டுகின்றன எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சான்றளிப்பது குறித்து எழுத்துபூர்வமாக விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது. இதன்பின் வேட்மனுக்கள் பக்கங்கள் குறித்து ஜனவரி 3க்குள் சான்றளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.