தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகம் மற்றும் புதுசேரி , காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளை மற்றும் செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசையில் காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னல் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும்,
செப்டம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிதிகள் அதே போல தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே போல் மீனவர்களுக்கும் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய தெற்கு தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்த தேதிக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.