மாநில மொழியில் யுபிஎஸ்சி தேர்வு – மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு!
யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், எந்த மாநிலத்திலும் பணியமர்த்தப்படலாம் என்பதால் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க மத்திய உள்துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.