அடுத்த 3 மணி நேரம் அப்டேட்! தமிழகத்தில் இந்த 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், வேலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கரூர்,விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருக்கிறது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.