ஆட்சியை கலைக்க அ.ம.மு.க. – தி.மு.க. இணைய வேண்டும்! யதார்த்தத்தை தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்-தினகரன் பதில்
அ.ம.மு.க. – தி.மு.க. என இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் ஆட்சியை அகற்ற முடியும் என்ற யதார்த்தத்தை தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் காலியாக உள்ள 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் முதலில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மே19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.அதிமுக ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தம் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஆட்சியை கலைக்க அ.ம.மு.க. – தி.மு.க. என இரண்டு கட்சிகளும் சேர்ந்தால் ஆட்சியை அகற்ற முடியும் என்ற யதார்த்தத்தை தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.