வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடன் வசதி பெறும் திட்டம் குறித்து வேளாண்மைத்துறை அறிவிப்பு.
வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாக்காமல் கிராம அளவில் ஒன்றுசேர்ந்து மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் கிடங்குகள், தரம்பிரிப்பு மையங்கள், குளிர்சாதனக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.
இத்தகைய உட்கட்டமைப்புகளுக்காக பல்வேறு திட்டங்களில் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.கிராம அளவில் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக முன்வரும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வட்டி மானியத்துடன் கடன் வசதி செய்து தருவதற்காக, வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதி எனும் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் எத்தகைய பணிகளுக்காக கடன் வசதி பெறலாம்? இத்திட்டத்தின் கீழ், மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் காட்டும் கூடங்கள், விளைபொருட்களின் தரத்தை மதிப்பிடுவதற்கான அமைப்புகள் உருவாக்கலாம்.
மேலும், தரம் பிரித்து, வைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்சாதன வசதிகள், போக்குவரத்துக்கு வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பலன்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற அறுவடைக்கு பின் மேலாண்மைக்கான உட்கட்டமைப்புகளை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…