உ.பி. பாலியல் வன்கொடுமை – நாளை திமுக மகளிரணி பேரணி
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.பின்பு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் உத்திர பிரதேச அரசு தவறுகளை திருத்திக்கொள்ளவும், ராகுல்காந்தியிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.