இன்று முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – மதுரை மாவட்ட ஆட்சியர்!

The District Collector has said that those who have not been vaccinated in Madurai will be barred from going to public places from today.

இன்று முதல் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனவை ஒழிக்க தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது வெளியில் நடமாட முடியாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.