50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு – பள்ளிக்கல்வித்துறை ஆணையர்
பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு.
மதிய உணவு கிடைக்காததால், மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது என்றும் உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டார்.