விரும்பத்தகாத வார்த்தைகள் கொண்ட கடிதம்.. முதலமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது – ஆளுநர்
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என முதல்வருக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஆளுநர் தகவல்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீக்கி முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி எழுதிய முதல் கடிதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் ஆளுநர் கூறுகையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்த முதல்வரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.
எனது அறிவுரையை மீறியும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. கடிதத்தில் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி குறித்து கூறிய கருத்துக்களை ஆளுநர் ரவி, இந்த கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். செந்தில் பாலாஜி கைதானது குறித்து நீங்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது பற்றி நான் விளக்கம் கேட்டும் பதில் தரவில்லை. விளக்கம் தராமல் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள். ஜூன் 1 மற்றும் ஜுன் 16 ஆகிய நாட்களில் விரும்பத்தகாத சொற்களை பயன்படுத்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாவதற்கு முன்பே அவரை அமைச்சர் பதிவில் இருந்து நீக்க கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியதாகவும், தனது கடிதத்திற்கு கடுமைய்யான வார்த்தைகளால் முதல் பதில் கடிதம் எழுதியதாகவும் ஆளுநர் கூறியுள்ளார் மேலும், முதலமைச்சருக்கு எழுதிய ஆளுநரின் கடிதத்தில், விரும்பத்தகாத மற்றும் வரம்புமீறி சொற்களை பயன்படுத்தி கடிதம் எழுதினீர்கள்.
செந்தில் பாலாஜியை நீக்க தனக்கு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன பிரிவு 154, 163, 164-ஐ பயன்படுத்தி செந்தில் பாலாஜியை நீக்குவதாக தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் அவர் மீதான வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என்றுள்ளார்.
மேலும், ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும் என்ற வழக்கமான நடைமுறைகள் எனக்கு தெரியும். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாடு பாரபட்சமானது. அமைச்சராக தொடர்ந்ததால் விசாரணை அமைப்புகளை சரியாக பணி செய்ய விடவில்லை என்றும் ஆளுநர் தனது முதல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.