நாளை முதல் திரைப்பட ஷூட்டிங்குக்கு அனுமதி.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில் நாளை முதல் திரைப்பட படபிடிப்புகள் தொடங்கலாம் என தமிழக அரசு தெரிவித்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திரைப்பட படபிடிப்புகள் நாளை முதல் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக வெளியிட்டுள்ளது.
அதில்,
- படபிடிப்புகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- படபிடிப்பில் பங்கேற்கும் நடிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கட்டாயமாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
- 75 தொழிலாளர்களை கொண்டு படப்பிடிப்புகள் நடத்த வேண்டும்.
- கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது.
- படப்பிடிப்பு நடத்தும் இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, போன்ற விதிமுறைகளை விதித்துள்ளது.