தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 8 மண்டலத்திற்குள் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் அவசியம்.
மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால், ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம். மேலும், மாநிலங்களுக்கு இடையே செல்லும் போக்குவரத்திற்கு வழக்கம் போல இ-பாஸ் நடைமுறை தொடரும். என அறிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்கள் கிழே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சிமண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.
மண்டலம் 7 மற்றும் 8 இல் பொதுப்போக்குவரத்திற்கான தடை தொடர்கிறது. மற்ற மண்டலங்களில் 50 சதேவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…