வருகின்ற 21-ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரனமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் நடத்தப்பட முடியாமல் போனதால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வதாக பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. ஆனால் கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்ட்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், தேர்வுகள் எப்போது நடைபெறும் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, யுஜிசி விதிமுறைபடி செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று கூறியது.
அந்த வகையில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியை மாற்றியதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிதுள்ளது. இதற்கு முன்பு இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் 14 முதல் நடைபெறுவதாக இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் தற்போது செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…