தந்தை பெரியாரின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இப்படி சாதிதுவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என டிடிவி தினகரன் ட்வீட்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.ஏ வரலாறு படத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அதில் சாதி பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வண்ணம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ வரலாறு, முதலாமாண்டு படிப்புக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவத் தேர்வுக்கான வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையிலான கேள்வி அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதுவும் தந்தை பெரியாரின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இப்படி சாதிதுவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. பாடப்புத்தகங்களிலும், வினாத்தாள்களிலும் அடிக்கடி இப்படி மாணவச் செல்வங்களின் மனதில் சாதி எனும் நஞ்சை விதைக்கும் விதமான பகுதிகள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது
இதனைத் தடுப்பதற்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…