பெரியாரின் பெயரில் பல்கலைக்கழகம்..! ஆனால் இந்த கேள்வி கேட்டிருப்பது வெட்கக்கேடானது -டிடிவி

Default Image

தந்தை பெரியாரின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இப்படி சாதிதுவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என டிடிவி தினகரன் ட்வீட். 

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.ஏ வரலாறு படத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.  அதில் சாதி பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வண்ணம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரியார் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ வரலாறு, முதலாமாண்டு படிப்புக்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவத் தேர்வுக்கான வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையிலான கேள்வி அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதுவும் தந்தை பெரியாரின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே இப்படி சாதிதுவேசத்துடன் கேள்வி அமைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. பாடப்புத்தகங்களிலும், வினாத்தாள்களிலும் அடிக்கடி இப்படி மாணவச் செல்வங்களின் மனதில் சாதி எனும் நஞ்சை விதைக்கும் விதமான பகுதிகள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது

இதனைத் தடுப்பதற்கு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்