இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா!

Default Image

துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதன்பின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமன செய்யும் மசோதா மீதான காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்ய, இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணையவேந்தர்களை இதுவரை ஆளுநர் நியமனம் செய்து வந்த நிலையில், மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் கொண்டுவந்த சட்ட முடிவடிவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து, தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பும் அளித்தனர். இதன்பின்னர் வாக்கெடுப்பு மூலம் தமிழக அரசு கொண்டுவந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்து வரும் நிலையில், இனி தமிழகத்திலும் அப்படித்தான்.

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட 2022 தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் என்று தகவல் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர் நியமன மசோதா, இன்று ஆளுநர் மாளிகை சென்றடையும் என சட்டத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நீட் விலக்கு, மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு உள்ளிட்ட மசோதாக்கள் ஆளுநர் உள்ள நிலையில், துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும் இன்று அனுப்பப்படுகிறது.

இதற்கு ஒப்புதல் வழங்குவர் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில், துணைவேந்தர்கள் மசோதாவும் அனுப்பப்படவுள்ளது. இதுவரை ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் உள்ள துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், இனி தமிழக அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்