‘United we stand’ – முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் தேசிய கோடி..!
நாளை நாடு முழுவதும், 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். சுதந்திரன தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு புகைப்படத்தை மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தில், தேசியக்கொடியின் மேல் ‘INDIA’ மற்றும் தேசிய கொடியின் கீழ் ‘United we stand’ சென்ற வாசகம் இடப்பெற்றுள்ளது.