சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என கூறிய நிலையில், வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடிக்க போலீசார் சென்ற போது, அவர் மாடியில் இருந்து குதித்து கால் முறிவு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நாட்களுக்கு முன்பதாக விருதுநகர் கிழக்குமாவட்ட அதிமுக சார்பில், சாத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக தன்மீது வழக்கு பதிவு செய்தாலும் பரவாயில்லை. எனவே கட்சி மாற நினைப்பவர்கள் மரணத்திற்கு தயாராக இருங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இது சம்பந்தமாக, கொலை மிரட்டல், அச்சுறுத்தல் விளைவிப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டில் பதுங்கியிருந்தவரை பிடிக்க போலீசார் சென்ற போது, அவர் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்த நிலையில், கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…