புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர்.
இந்த அறிவிப்பின் C.I.T.U , A.I.T.U.C , I.N.T.U.C ., L.P.F , A.I.C.C.T.U ., H.M.S உள்பட 12 மத்திய தொழிற்சங்கங்க ஊழியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முழக்கங்களை எழுப்பினர்.இந்த மறியல் போராட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் சாலையில் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சாலையில் படுத்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதையடுத்து பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் முடங்கின.
இந்த போராட்டத்தில் சிஐடியூ மாநில செயலாளர் ரசல், நிர்வாகிகள் குமாரவேல், முருகன், சிபிஎம் ராஜா, பூமயில்,பூவிராஜ் , சங்கரன் , ஏஐடியூசி மணி ஆச்சாரி, தொமுச முருகன், மரியதாஸ், சந்திரசேகர், கருப்பசாமி, ராமசாமி, ஐஎன்டியூசி கதிர்வேல், மைக்கேல் சந்திரசேகர் ராஜகோபல், பாலராஜ், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்தனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…