மதுக்கடைகள் இல்லாத ஒன்றியம்…!!!
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம ஊராட்சி, மற்றும் அதற்குற்பட்ட 77 குக்கிராமங்களில் மதுக்கடைகள் இல்லை என கூறியுள்ளனர்.
மது இல்லா ஒன்றியம் :
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம ஊராட்சி மற்றும் அதற்குற்பட்ட 77 குக்கிராமங்களில் மதுக்கடைகள் இல்லை. மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது; இந்த ஒன்றியத்தில் டாஸ்மாக் கடை திறந்து ஓரி மணிநேரத்திற்குளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மது கடையை அடைத்துள்ளனர்.
மேலும், வில்லூர், காரியாபட்டி, விருதுநகர் பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள், கள்ளத்தனமாக இங்கு விற்கப்படுகின்றன என்று கூறியுள்ளனர். இதனை தடுப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.