18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் RC புக் ரத்து.! போக்குவரத்துறை புதிய அறிவிப்பு.!
சாலை விதிகள்: சாலை விதிமீறல்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைக்கவும் பல்வேறு புதிய திருத்தங்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கவும், வாகன பயன்பட்டால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கவும் அவ்வப்போது மத்திய போக்குவரத்து அமைச்சகம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும். அதனை மாநில அரசுகள் அனுமதி பெற்று அந்தந்த மாநிலங்களில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.
அப்படியாக, மத்திய போக்குவரத்து அமைச்சகம் வரும் ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய போக்குவரத்து விதிமுறைகளை அறிவித்துள்ள்ளது. அதில் வாகன விதிமீறல்கள், சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலில், 18 வயதுக்கு குறைவானோர் வாகனம் ஓட்டினால், அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் 25 வயது வரையில் எந்த வாகனத்தையும் இயக்க அனுமதியில்லை என்றும், மேலும், அந்த வாகனத்தின் பதிவுசான்று (RC புக்) ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தந்த சாலை வகை, போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ள வேகத்தை விட அதிவேகமாக வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் 1000 ரூபாய் அபராதம் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுற்றுசூழல் பாதுகாப்பு கருதி, புகை கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டு 9 லட்சம் அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தே நீக்கப்படும் என குறிப்பிட்ட புதிய போக்குவரத்து விதிமுறைகளை மத்திய போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை இன்னும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. தமிழக போக்குவரத்து கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு படிப்படியாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகள் அமலில் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.