ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார்.
சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங், நாளை மாலை தனி ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வருகை புரிந்து, மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று ஆய்வு நடத்துகிறார்.
பின்னர், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திலும் ஆய்வு நடத்துகிறார். அங்கு, கடலோரக் காவல்படை, விமானப்படை, கடற்படையினரின் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜ்நாத் சிங் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…