பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகல் – ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்!
பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.
பாஜகவில் இருந்து விலகிய கௌதமி..! அழகப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு..!
இதற்கிடையில், நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் என்பவர் குடும்பத்தினர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள், கௌதமி ஏன் கட்சியை விட்டு வெளியேறினார் என தெரியவில்லை; இப்போதுதான் செய்தியை அறிந்துக்கொண்டேன்; நடிகை கவுதமி கட்சிக்காக நேரத்தை செலவிட்டுள்ளார்அவரின் உழைப்பை நாம் பாராட்ட வேண்டும். பாஜகவை விட்டு அவர் வெளியேறியதற்கான காரணம் குறித்து விசாரிப்போம் என தெரிவித்துள்ளார்.