தமிழ் சங்க நிகழ்ச்சியில் நீட் தேர்வு தடை மசோதா.! பதில் அளிக்க மறுத்த மத்திய அமைச்சர்.!
நேற்று நடைபெற்ற தமிழ் சங்க நிகழ்வின் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியாவிடம் நீட் தேர்வு விலக்கு பற்றி கேட்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் உத்திர பிரதேச மாநிலம், காசியில் காசி தமிழ்ச்சங்கம் நிகழ்வு நடைபெற்றது. காசிக்கும் தமிழுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கம் :
தற்போது அதே போல, குஜராத்திலும் தமிழ்ச்சங்கம் நிகழ்வு நடைபெற உள்ளது. அங்கு சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்வு வரும் ஏப்ரல் 14 முதல் 24 வரையில் 10 நாட்கள் இந்த தமிழ்ச்சங்க நிகழ்வு நடைபெறுகிறது.
மன்சூக் மாண்டவியா :
இதன் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சரிடம் நீட் விலக்கு மசோதா பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
நீட் விலக்கு மசோதா :
அதற்கு பதில் கூறிய அமைச்சர் , அது வேறு, நாம் இப்பொது வந்திருப்பது வேறு நிகழ்ச்சிக்காக என கூறி நீட் விலக்கு பற்றி பதில் கூற மறுத்துவிட்டார். அவர் ஆங்கிலத்தில் கூற, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதனை தமிழில் மொழிபெயர்த்து கூறினார்.