DD பொதிகை., ஜனவரி முதல் DD தமிழ்.! – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.!

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அதே போல, எங்கள் DD நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். இனி அவர்களும், முதல்வர் முதல் அனைவரிடத்திலும் கேள்வி கேட்பர். இதற்காக வெளியில் இருந்து தற்போது ஆட்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நிரந்தரமாக ஆட்களை நியமிப்போம். பிரதமர் மோடி குறிப்பிட்டது போல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என தூர்தஸன் பொதிகை சேனலில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.
அடுத்து தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது குறித்து கேட்கையில், இது நமது நாடு மட்டும் தொடர்புடைய பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனையில் இரு நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025
நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!
February 27, 2025