மத்திய இணையமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார்.
அப்போது அவரிடம் , கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் , அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர் அது குறித்து கருத்துக்களை கேட்டனர்.
ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்தவில்லை.! அண்ணாமலை பேட்டி.!
இதற்கு பதில் கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இதற்கு நான் பதில் ஒரே வரியில் தான் கூற முடியும் என கூறிவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் என தொடர்சியாக முழக்கமிட்டு கொண்டே இருந்தார்.
அதன் பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க 400 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார் என கூறினார். மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு , மீனவர்கள் போராட்டம் தற்போது தேவையற்றது என கூறினார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் குறித்து, தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த கோஷத்தால் பாகிஸ்தான் வீரர்களை யாரும் அவமானப்படுத்தவில்லை. அது சாதாரண விஷயம் என கருத்து கூறினார்கள் என்பது குறிப்பிட தக்கது.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…