ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. என தொடர் முழக்கமிட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.!

Union Minister L Murugan

மத்திய இணையமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான எல்.முருகன் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார்.

அப்போது அவரிடம் , கடந்த சனிக்கிழமை அன்று குஜராத் , அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை பார்த்து சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர் அது குறித்து கருத்துக்களை கேட்டனர்.

ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் பாகிஸ்தான் வீரர்களை கேவலப்படுத்தவில்லை.! அண்ணாமலை பேட்டி.!

இதற்கு பதில் கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இதற்கு நான் பதில் ஒரே வரியில் தான் கூற முடியும் என கூறிவிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் , ஜெய் ஸ்ரீ ராம் என தொடர்சியாக முழக்கமிட்டு கொண்டே இருந்தார்.

அதன் பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுக்க 400 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார் என கூறினார்.  மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு , மீனவர்கள் போராட்டம் தற்போது தேவையற்றது என கூறினார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் குறித்து, தமிழக விளையாட்டுதுறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அந்த கோஷத்தால் பாகிஸ்தான் வீரர்களை யாரும் அவமானப்படுத்தவில்லை. அது சாதாரண விஷயம் என கருத்து கூறினார்கள் என்பது குறிப்பிட தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்