“தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்;பிரதமருக்கு நன்றி” – மத்திய அமைச்சர் எல்.முருகன்..!
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அறிவித்த பிரதமர் மோடி அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும்,இந்த அறிவிப்பின் மூலமாக வடஇந்தியாவில் தமிழ் தொடர்பான விரிவான ஆய்வு இனி வரக்கூடிய நாட்களில் நடத்தப்படும் என்றும், தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி தமிழ் ஆய்வு இருக்கை பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது:
“தனது எழுதுக்கள் மூலம் மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வுக்கு வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்தார்.இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள்”,என்று தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலை.யில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள்!!!@PMOIndia @PIB_India pic.twitter.com/MomEd5OlCS
— Dr.L.Murugan (@Murugan_MoS) September 11, 2021