புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள அமைச்சர் எல் முருகனுக்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் முதல்வர் ட்வீட்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் இடம்பெற்றிருந்தார்.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற எல் முருகனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மத்திய இணை அமைச்சரான எல்.முருகனுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் எல் முருகன் அவர்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…