முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் கிரிராஜ் சந்திப்பு!

Default Image

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி அன்று  மெசியா,  . செந்தில்குமார் மற்றும் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இம்மீனவர்கள் 19 ஆம் தேதி அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும்.ஆனால்  அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை.பின் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. தற்போது இந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர்.

ஏற்கனவே இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு ,அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்   தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து பேசியதாகவும்  கூறப்படுகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்