டாக்டர் அப்துல்கலாம் பற்றிய புத்தகம் வெளியிட்டு விழா நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று பாஜக மாநில தலைவர் துவங்கிய ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையை துவங்கி வைத்தார். அதன் பிறகு இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதபுர சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து தற்போது மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை வெளியிடும் விழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்துல்கலாம் குடும்ப உறுப்பினர்கள் எழுதிய அப்துல்கலாம் : நினைவுகளுக்கு மரணமில்லை (Dr APJ Abdul kalam : Memories Never Die) எனும் புத்தகத்தின் ஆங்கில பதிப்பை அமித்ஷா வெளியிட்டார்.
Dr APJ Abdul kalam : Memories Never Die புத்தகத்தை விஞ்ஞானி Y.S.ராஜன் மற்றும், அப்துல்கலாமின் அண்ணன் மகள் Dr. APJM நசீமா மரக்காயர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் டாக்டர் அப்துல்கலாம் பற்றிய அறியப்படாத தகவல்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், தான் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு 1997 முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அப்துல்கலாம் இந்தியாவிலேயே மிக பெரிய விஞ்ஞானி. அப்போதே பாரத ரத்னா விருது வாங்கிவிட்டார். அவர் மிகவும் எளிமையான மனிதர். ராமதானபுரத்திற்கு பெருமை சேர்த்தவர். 1998ஆம் ஆண்டு இந்தியாவின் கனவு பாதை திட்டத்தை வகுத்தவர் என டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் பற்றி புகழாரம் சூட்டினார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில், அப்துல்கலாம் குடும்ப உறுப்பினர்கள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…