1997இல் எம்எல்ஏவாக ஆன போதே அப்துல்கலாம் மிக பெரிய விஞ்ஞானி.! புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா புகழாரம்.!

Union ministet Amit shah

டாக்டர் அப்துல்கலாம் பற்றிய புத்தகம் வெளியிட்டு விழா நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று பாஜக மாநில தலைவர் துவங்கிய ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையை  துவங்கி வைத்தார். அதன் பிறகு இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதபுர சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து தற்போது மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை வெளியிடும் விழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்துல்கலாம் குடும்ப உறுப்பினர்கள் எழுதிய அப்துல்கலாம் : நினைவுகளுக்கு மரணமில்லை (Dr APJ Abdul kalam : Memories Never Die) எனும் புத்தகத்தின் ஆங்கில பதிப்பை அமித்ஷா வெளியிட்டார்.

Dr APJ Abdul kalam : Memories Never Die புத்தகத்தை விஞ்ஞானி Y.S.ராஜன் மற்றும், அப்துல்கலாமின் அண்ணன் மகள் Dr. APJM நசீமா மரக்காயர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் டாக்டர் அப்துல்கலாம் பற்றிய அறியப்படாத தகவல்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது.

 இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், தான் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு 1997 முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அப்துல்கலாம் இந்தியாவிலேயே மிக பெரிய விஞ்ஞானி. அப்போதே பாரத ரத்னா விருது வாங்கிவிட்டார். அவர் மிகவும் எளிமையான மனிதர். ராமதானபுரத்திற்கு பெருமை சேர்த்தவர். 1998ஆம் ஆண்டு இந்தியாவின் கனவு பாதை திட்டத்தை வகுத்தவர் என டாக்டர் ஏபிஜே.அப்துல்கலாம் பற்றி புகழாரம் சூட்டினார் மத்திய அமைச்சர் அமித்ஷா.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில், அப்துல்கலாம் குடும்ப உறுப்பினர்கள், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்