இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை.!

Amit Shah

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டியும், 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 11-இல் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் முன்னதாக இன்று தமிழகம் வருகிறார். அதன்படி, இன்று இரவு 9 மணிக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டி ஐடிசி நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளார். முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் அமித்ஷா, பாஜக கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும், 11-ஆம் தேதி சென்னை கோவிலம்பாக்கத்தில் நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் சென்னையில் ஆலோசிக்கிறார். பின்னர், அன்று பிற்பகல் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest