மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை! போக்குவரத்து மாற்றங்கள்!
துணை குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நாளை (ஜன.31) சென்னை வருவதை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: இன்று (ஜனவரி 31, 2025) துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தரவுள்ளார்கள். முன்னாள் மத்திய அமைச்சரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமண விழா சென்னையில் நடைபெறவுள்ளது என்பதால் விழாவில் பங்கேற்க அவர்கள் வருகை தரவுள்ளார்கள்.
அவர்கள் சென்னைக்கு வருவவதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 14.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!
February 24, 2025
தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு… விலை எவ்வளவு தெரியுமா?
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…
February 24, 2025
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025