4 மாவட்ட வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

thoothukudi floods Nirmala

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்தும் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனுக்குடன் செய்து வருகிறது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த 800 ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை, முப்படைகள் இணைந்து 5,049 பேர் மீட்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

மழை பாதிப்பின் போது முதல்வர் எங்கு இருந்தார்..? நிர்மலா சீதாராமன் கேள்வி..!

வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, விமானப்படை, கடற்படை மூலமும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்