வெளியாகிறதா?? நீட் தேர்வு முடிவுகள்…சூசகமாக போட்டுடைத்த போக்ரியால்..!
தேர்வுகள் முடிவுகள் வெளியிட உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையிலும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது இதனையடுத்து, செப். 13ம் தேதி திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது.
மேலும் தொற்றுப்பரவலுக்கு இடையிலும் நீட்தேர்வினை 15.97 லட்சம் பேர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் தேர்வெழுதினர். மேலும் தொற்றுக் காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்கப்படும். என்று தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல் தெரிவித்தருந்த நிலையில் இதற்கு முன் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கடந்த செப். 26ம் தேதி நீட் தேர்விற்கான கேள்விகளுக்கான பதிலை வெளியிட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் அக்.,12ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று என்டிஏ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு வெளியப்படும் நீட் தேர்வு முடிவுகளை அறிய தேர்வர்கள் என்டிஏ அல்லது நீட் வலைத்தளங்களான www.nta.ac.in / ntaneet.nic.in மூலமாக முடிவுகளை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகமாகி உள்ளதாகவும்,ஆகையால் கட்-ஆஃப் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.