ஹத்ரஸ் மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சீமான் டிவிட் செய்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலர் தங்களது கருத்துக்களையும் இரங்களையும்,தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அச்செய்தியைக் கேள்வியுற்ற நொடி முதல் அடைந்த வேதனையிலிருந்து மீள முடியாது தவித்து வருகிறேன்.
மேலும், கற்பனைக்குக்கூட எட்டாத பாலியல் பெருங்கொடுமையும், அதீத வன்முறையும் அந்த ஏழைப்பெண் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினரை இறுதிமரியாதையை கூட செலுத்தவிடாமல், உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர அவசரமாக அப்பெண்ணின் உடலுக்கு எரியூட்டியது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம்.
இந்நிலையில், இந்நாட்டின் குடிமகனாகப் பிறந்து அநீதிக்கு எதிராக எதுவும் செய்யவியலா இக்கையறு நிலை குற்றவுணர்வுக்குள் தள்ளுகிறது. அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…