தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக வார்டு மறுவரையறை – அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகளில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறுவரையறை தமிழக அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்றும் வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகளில் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.