சீருடை பணியாளர் தேர்வு – நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவு ரத்து.!
தமிழகத்தில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. அதன் அடிப்படை ஆதாரம் இன்றி தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளதாக அரசுத்தரப்பு வாதம் ஏற்பட்டது. மேலும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு விசாரணை செய்யப்பட வேண்டியது என தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.