முதல்வர் எழுதிய “உங்களில் ஒருவன்” நூல் – இன்று வெளியிடும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி!

Published by
Edison

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலை இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிடுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள “உங்களில் ஒருவன்” என்ற சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று  வெளியிடப்படுகிறது.

அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமயில், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் ,”உங்களில் ஒருவன்” நூலின் முதலாவது பாகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,விழாவின் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  உரையாற்றுகிறார்இவ்விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதனையடுத்து,சென்னை தனியார் ஓட்டலில் நடைபெறும் விருந்தில் ராகுல் காந்தி,கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தேசிய அளவிலான அடுத்தகட்ட அரசியல் சூழல் குறித்து முதல்வர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

14 minutes ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

1 hour ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

1 hour ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

3 hours ago