படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம்!

Default Image

படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பி சதீஷ்குமார் என்னும் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக இருக்கக்கூடிய நீதிபதி பூர்ணிமா அவர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அவர், பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் B.Com பட்டப்படிப்பை முடித்து அதன் பின் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து உள்ளதாகவும், இதை கவனிக்காமல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அவரை வக்கீலாக பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, 12 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் அதன்பின் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே அரசு பணிகளில் சேர முடியும். ஆனால் இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலேயே நீதிபதி தேர்விலும் தற்போது வெற்றி பெற்று நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். எனவே முறையான பட்டப்படிப்பு படிக்காத நீதிபதி பூர்ணிமா அவர்களுக்கு பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து, விளக்கம் கேட்டு அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் அந்த வழக்கு மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது பூர்ணிமா பன்னிரண்டாம் வகுப்பு படித்ததற்கான கல்வி சான்றிதழ் தலைமை நீதிபதி காண்பித்ததை அடுத்து ஆதாரமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட சதீஷ்குமாரின் வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், 5 லட்சம் வழக்கு செலவுக்காக அபராதமாக மனுதாரர் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது எதிர் மனுதாரரான நீதிபதி பூர்ணிமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீல் சதீஷ்குமார் அவர்கள் 5 லட்சம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு கொடுக்கப்படாத பட்சத்தில் அவரிடமிருந்து அந்த தொகையை வசூலிப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருகிற 20-ஆம் தேதி நேரில் சதீஷ்குமார் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்