விடியா திமுக ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி பாழாய் போயுள்ளது – ஈபிஎஸ்

Default Image

அலட்சியம்,நிர்வாக திறமையின்மை காரணமாக, சுமார் 9லட்சம் டன் அரிசிக்கு உண்டான பலகோடி ரூபாய் பண இழப்பை இந்தவிடியா திமுக அரசு என்ன செய்ய போகிறது? ஈபிஎஸ் கேள்வி.

விடியா திமுக ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி பாழாய் போனதாக மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘விடியா திமுக ஆட்சியில், சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி பாழாய் போனதாக மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளது.நெல்லை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாத காரணத்தால்,மழையில் நனைந்தும்,வெயிலில் காய்ந்தும் போவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

இந்திய வாணிபக் கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான குடோன்களில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் சுமார் 9 லட்சம் டன், அதாவது சுமார் 92 கோடி கிலோ அரிசி மக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

அலட்சியம்,நிர்வாக திறமையின்மை காரணமாக, சுமார் 9லட்சம் டன் அரிசிக்கு உண்டான பலகோடி ரூபாய் பண இழப்பை இந்தவிடியா திமுக அரசு என்ன செய்ய போகிறது?இதே போன்று,தமிழகம் முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதை இந்திய உணவுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்