மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும் – உதயநிதி ஸ்டாலின்
முத்தமிழறிஞரின் இறப்புக்கு பிறகும் அவரின் எழுத்தைத் தொகுக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் சண்முகநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரை நூற்றாண்டு காலம் முத்தமிழறிஞர் கலைஞரின் நிழலாய் நீங்காமல் நின்று மறைந்த சண்முகநாதன் மாமா அவர்களின் உடலுக்கு மரியாதை செய்தோம். முத்தமிழறிஞரின் இறப்புக்கு பிறகும் அவரின் எழுத்தைத் தொகுக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.
அரை நூற்றாண்டு காலம் முத்தமிழறிஞர் கலைஞரின் நிழலாய் நீங்காமல் நின்று மறைந்த சண்முகநாதன் மாமா அவர்களின் உடலுக்கு மரியாதை செய்தோம். முத்தமிழறிஞரின் இறப்புக்கு பிறகும் அவரின் எழுத்தைத் தொகுக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும். pic.twitter.com/hXaQBYzfLO
— Udhay (@Udhaystalin) December 21, 2021