அங்கீகாரம் இல்லாத மனைகள் – பதிவு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு

Default Image

அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே 4ம் தேதி அறிவித்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு குறித்து மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், தற்போது, அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்