தமிழர்களின் ஆதரவை பெற முடியாத கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதிக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் ? மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…