கொரானாவிற்கும் , கோழிக்கும் தொடர்பில்லை – உடுமலை ராதாகிருஷ்ணன் ..

கொரானாவிற்கும் ,கோழிக்கும் 43எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோழி இறைச்சி , முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வரும் என அச்சப்படத் தேவையில்லை. கோழியில் கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சில நாள்களுக்கு முன் உயிர் கோழி கிலோ 96 ரூபாய்க்கும் , உரித்த கோழி கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வருவதாக எழுந்த வதந்தியால் கோழி கறி விலை சரிந்துள்ளது.
தற்போது உயிருள்ள கோழி 40 ரூபாய் எனவும் உரித்த கோழி 60 ரூபாய் க்கும் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.