உக்ரைன் விவகாரம் : இது இந்திய அரசின் பொறுப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவர்கள் மீது மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவர்கள் மீது மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும். உக்ரைனில் நிலவும் இக்கட்டான நேரத்தில் இந்திய மாணவர்கள் தனித்து விடப்பட்ட செய்திகள் வருகின்றன. உக்ரேனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பது மத்திய அரசின் கடமை. மத்திய அமைச்சர்கள் தேவையற்ற கருத்துக்களை கூறுவதை பிரதமர் மோடி தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
It is the responsibility of the Indian Government to safeguard the life of every Indian passport holder. @PMOIndia should reign in their Ministers from issuing unwarranted statements and put in their efforts for evacuating every Indian safely. (2/2)
— M.K.Stalin (@mkstalin) March 2, 2022