உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சசிகலா அவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இந்தியாவில் தொடர்வதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து வரும் போர் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது மிகவும் கவலையடையச் செய்கிறது. உக்ரைனுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பயில சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது சிக்கி தவித்துக் கொண்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 18,000 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மனதிற்கு ஆறுதல் அளித்தாலும், மீதமுள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உக்ரைனில் என்றைக்கு நிலைமை சீராகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே போன்று கல்வியை பாதியில் இழந்த இந்திய மாணவர்களின் எதிர்காலமும் என்ன ஆகுமோ என்ற கவலை அனைவரிடத்திலும் உள்ளது. இது போன்ற இக்கட்டான நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கல்வி தடைபடாமல், அவரவர் மாநிலத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் கல்வியை தொடரும் வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய மாணவர்கள் தங்களின் மருத்துவ கனவை எப்படியாவது நிறைவேற்றிடவேண்டும் என்று முடிவெடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதே போன்று உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் குறைந்த செலவில் மருத்துவ கல்வி பெற முடிவதாக கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சில மாணவர்களின் பெற்றோர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு தங்கள் சொத்து, நகைகளை விற்று, அந்த பணத்தில், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர்.
மேலும், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அதில் உள்ள சிக்கல்களுக்கு மத்தியில் மருத்துவ இடம் கிடைக்கப் பெறாதவர்களே அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கனவை நிறைவேற்றி கொள்வதாக கூறுகின்றனர். எனவே இந்த தருணத்திலாவது மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை விலக்கிடும் வகையில் கொள்கை முடிவை மேற்கொண்டு, இந்திய மாணவர்கள் நம் இந்திய நாட்டிலேயே மருத்துவம் பயில தேவையான வழிவகைகளை ஏற்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…