பிரிட்டன் ரிட்டன் தொடர்பு.. 4 பேருக்கு கொரோனா..!
பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வேகமாக பரவுவதால் அந்நாட்டில் பல முன்னிச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரிட்டன் உடனான விமான சேவையை பல நாடுகள் துண்டித்துள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய உடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.